தமிழகத்துக்கு ரெட் அலர்ட் வாபஸ்!. ரெட் அலர்ட்குறித்து வெதர்மேன் விளக்கம்!.



weather man talk about red Alert


தமிழகத்துக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டலத்தில், மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தென் தமிழகப் பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துள்ளது.

புயல் சின்னம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் - கேரளாவின் எல்லை மாவட்டங்களில், 20 செ.மீ., அளவுக்கு, இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை, வாபஸ் பெறப்பட்டுஉள்ளது.

ரெட் அலர்ட் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், மழை பெய்வது ஒரு கணிப்பு மட்டுமே. வரலாறு காணாத வகையில் மழைப்பொழிவு இருக்கும் என்பதெல்லாம் வதந்தி மட்டுமே. அதனால் வாட்ஸ் ஆப் தகவல்களை நம்ப வேண்டாம். மிக மிக கனமழை பெய்வது, மழைக்கான நாள் நெருங்கும் போது கணித்து விட முடியும். 

மழையை குறித்து வெளிவரும் செய்திகள் பெரும்பாலும் உத்தேசமானது தான். அதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.