மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டால் நாளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது?" உயர் நீதிமன்றத்தின் அதிரடி கேள்விகள்
சென்னை - சேலம் எட்டு வழி சாலை அமைப்பதற்கான திட்டம் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் சாலை அமைப்பதற்காக பெருமளவிலான விளைநிலங்களை ஆக்கிரமித்தது அரசு. விளைநிலங்களை அளவிடும்போது விவசாயிகளும் கிராம மக்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அவர்களை காவல்துறையினர் கொண்டு கடுமையாக தாக்கியது அரசு. முதியவர்கள் என்று கூட பாராமல் தாக்குதல் சம்பவம் கடுமையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், நில உரிமையாளர்கள் மற்றும் பாமக சார்பில் பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய குழு நிலம் அளவிடும் பணி, மரங்களை வெட்டுவது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் இடைக்கால தடை விதித்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசிடம் நீதிபதிகள் பல கேள்விகளை அதிரடியாக எழுப்பினர்.
- நாடு முழுவதும் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து சாலைகள் போட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?
- இப்படி நாடு முழுவதும் சாலைகளாக அமைத்தால் நாளை சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?
- ஏரிகள் அனைத்தும் இன்று மனைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.
- விவசாய நிலங்களை அழித்தால் நாளைய தலைமுறையினருக்கு வெறும் கல்லும் மண்ணும்தான் மிஞ்சும்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், விளைநிலங்களை மாற்றுவதை யாரும் எதிர்க்கவில்லை என்று வாதிட்டார். அதற்குக் குறுக்கிட்ட மனுதாரர்களின் வழக்கறிஞர், விவசாய நிலங்களை அழித்துத்தான் சாலை அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.