96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கொடைக்கானலில் அதிர்ச்சி.. ஒற்றை கொலுசு.. தலையில்லாமல் மிதந்து வந்த உடல்.!! காவல்துறை விசாரணை.!!
சுற்றுலா தளமான கொடைக்கானலின் சில்வர் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சியில் தலையில்லாமல் மிதந்து வந்த பெண் உடல் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல்
தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குவது கொடைக்கானல். இதன் இயற்கை அழகு மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் கூட்டம் அலைமோதியது.
தலை இல்லாமல் மிதந்து வந்த பெண் சடலம்
இந்நிலையில் நேற்று கொடைக்கானலில் தொடக்கத்தில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் தலை இல்லாத பெண் உடல் நீரில் மிதந்து வந்தது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: #JustIN: வெளுத்து வாங்கிய மழை; 4 எக்ஸ்பிரஸ் இரயில்கள் ரத்து.. விபரம் இதோ.!
விசாரணை
இந்த சடலம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் தலை இல்லாததால் அடையாளம் காண்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இறந்த பெண்ணின் காலில் ஒற்றை கொலுசு மட்டும் இருந்திருக்கிறது. அந்த பெண்ணின் உடல் அழுகி இருப்பதால் இறந்து சில நாட்கள் ஆகி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அந்தப் பெண் கொலை செய்யப்பட்டாரா.? அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா.? என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொடங்கியது பருவமழை.. மக்களே கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்... விவரம் இதோ.!