காட்டிற்குள் கணவருடன் வாக்கிங் சென்ற பெண் அதிகாரிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அலறிகதறிய கணவன்!



Women dead by attacking elephant

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை என்ற  வனப்பகுதி அமைந்துள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த காட்டு பகுதியில் பலரும் அடிக்கடி வாக்கிங் மற்றும் மலையேற்றம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது.மேலும் அவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்துள்ளது. அதனால் காட்டுப்பகுதிக்குள் வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கோவையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தனது கணவர் பிரசாந்த் மற்றும் நண்பர்களுடன் பெரியநாயக்கன்பாளையம் காட்டுப்பகுதிக்கு மலையேற்றம் சென்றுள்ளார். புவனேஸ்வரி சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாக பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

elephant

அப்போது காட்டிற்குள் திடீரென்று அவர்கள் முன்பு வந்த காட்டுயானை ஒன்று அவர்களைத் துரத்தியுள்ளது. அப்பொழுது அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடியுள்ளனர். அப்பொழுது  புவனேஷ்வரி ஓட முடியாமல் காட்டு யானையிடம் சிக்கியுள்ளார்.
யானையிடமிருந்து அவரைக் காப்பாற்ற கணவர் பிரசாந்த் மற்றும் நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. மேலும் காட்டுயானை துதிக்கையால் புவனேஸ்வரியை தூக்கிவீசி காலால் மிதித்து கொன்றது.

கண்முன்னே கதறிதுடித்து இறந்த மனைவி புவனேஸ்வரியின் உடலை பார்த்து கணவன் பிரசாந்த் மற்றும் மற்றவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.