பேருக்கு தான் பெண் வேட்பாளர்.. இப்டி பண்றீங்களே...! எங்கே வேட்பாளர்.? கொந்தளித்த பெண்கள்.? திகைத்துப்போன அரசியல் கட்சியினர்.!



Women's Self Help Group Talk about women candidates

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து முடிந்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பல வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்தநிலையில், பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளில் பெரும்பாலும் வேட்பாளர்களின் கணவன், மகன், சகோதரர்களே ஓட்டு கேட்க செல்வதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அங்கு வாக்கு சேகரிப்பு சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், அங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வார்டுகளில் பெரும்பாலும் வேட்பாளர்களின் கணவன், மகன், சகோதரர்களே ஓட்டு கேட்க செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள், இது பெண் வார்டு தானே? எங்கள் வேட்பாளர் எங்கே என கேட்டனர். மேலும், ஓட்டு கேட்கவே வேட்பாளரை அழைத்து வராதவர்கள் அவர்களை சுயமாக செயல்பட எப்படி அனுமதிப்பீர்கள்... என சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சியினர் பெண் வேட்பாளருடன் வந்து ஓட்டு கேட்க வருவதாக கூறி சென்றனர்.