திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கஞ்சா போதையில் கொலை, கொள்ளை: கொலையாளிகளை கண்டு திகைத்து நின்ற போலீசார்..!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (67). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி காந்திமதி (62). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே கடந்த ஏழு வருடங்களுக்கு முன் பாண்டி இறந்துவிட்டதால், காந்திமதி கணவரால் கிடைத்த ஓய்வூதிய தொகையை கொண்டு தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் உறவினர் வீட்டிற்குள் வந்து பார்த்த போது காந்திமதி கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, தகவலறிந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது மர்ம மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையினரின் விசாரணையில் மூதாட்டி வீட்டின் அருகில் வசிக்கும் இளைஞர் முத்துராஜா மற்றும் ஒரு சிறுவன் மீது சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கொலையாளிகள் அவர்கள்தான் என்பதை உறுதி செய்தனர்.
விசாரணையில் இருவரும் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானது தெரியவந்தது. போதையில் உல்லாசமாக வாழ, மூதாட்டியின் நடவடிக்கையை கண்காணித்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் குடி போதையில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு காந்திமதி அணிந்திருந்த செயின், தோடு, மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்து சென்றது, தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் மூதாட்டியிடம் பறித்து சென்ற நகைகளை மீட்டனர். கஞ்சா மற்றும் மது போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் உல்லாசமாக வாழ மூதாட்டியை கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.