மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மரணத்தை தேடித்தான் போறோம்னு அப்போது அவருக்கு தெரியல!! ஓட்டு போட சொந்த ஊருக்கு வந்த இளைஞர் ரயிலில் அடிபட்டு மரணம்..
தேர்தலுக்கு ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜானிக்கிராமனின் மகன் ரமேஷ்(26). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்த ரமேஷ் சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் ரமேஷ். அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விஷயம் அறிந்ததும் மருத்துவமனைக்கு வந்த ரமேஷின் குடும்பத்தினர், இறந்த தங்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுத காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.