மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்கா? கவலைய விடுங்க! விரைவில் வருகிறது புது தொழிநுட்பம்!
இந்த உலகிற்கு பல கண்டுபிடிப்புகளை குடுத்ததில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. இன்று பிறந்த குழந்தை கூட கணினியை எளிதில் உபயோகப்படுத்தும் அளவிற்கு சாதாரண ஒன்றாக மாற்றிய இந்த நிறுவனம் தற்போது ஒரு மனிதனுக்கு வர இருக்கும் இதயம் சம்பந்தமான நோய்களை முன்கூட்டியே கண்டறியும் AI தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது.
அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவ துறையில் பல்வேறு புதுமைகளை படைக்க துவங்கியிருக்கிறது.
மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென்பொருள் இந்தியர்களிடம் இதய நோய் வருவதற்கான ஆபத்தை மிகத்துல்லியமாக கண்டறியும் என கூறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இருதய நோய் சார்ந்த பல்வேறு மருத்துவ அறிக்கை விவரங்களை இணைத்து இந்த மென்பொருள் இயங்குகிறது.
மேலும் பாதிப்பு மிக அதிகமாகவோ, அல்லது துவக்க நிலையில் உள்ளதா என்பதையும் இந்த மென்பொருள் கணித்து வழங்குகிறது.
ஏ.ஐ. சார்ந்த ஏ.பி.ஐ. மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இதய துடிப்பு நோய் வருவதை முன்கூட்டிய கணிக்க முடியுமா என்று பரிசோதித்து வருகின்றனர்.