View Once முறையில் வரும் வாட்சப் மெசேஜை ஸ்கிரீன் சாட் எடுக்க முடியாது; வாட்சப் நிறுவனம் அறிவிப்பு..!
பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி அடுத்த அப்டேட்டை வாட்சப் வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலிகளில் ஒன்றாக இருப்பது வாட்சப். தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு வகையான விதிமுறைகளை பயனர்களுக்கு வகுத்து வருகிறது.
இது வாட்சப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அப்டேட்டில், ஒரு முறை (View Once) பார்க்கும் படி பார்வையாளர் புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பினால் அதனை ScreenShot அல்லது வீடியோ Recoding முறைகளில் பதிவு செய்ய இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முயற்சிக்கும் பட்சத்தில், புகைப்படம் அல்லது வீடியோ கருப்பு நிறத்துடன் இருக்கும். எந்த ஒரு செயலியாலும் இனி வாட்ஸப்பில் ஒருமுறை பார்க்கும் வகையில் அனுப்பப்படும் போட்டோக்களை பதிவு செய்ய முடியாது என்பதால், அதனை வாடிக்கையாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.