உலகில் வாழும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!



happy-womens-day


உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் மகளிர் தினத்தன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்த நாளாக கருதப்படுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள் எந்த அளவிற்கு ஊதியம் பெறுகின்றனர்களோ அதே அளவிற்கு பெண்களும் ஊதியம் பெறுகின்றனர். 1920ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் உரிமைக்காக பெண்கள் கலந்து கொண்ட போராட்டம் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்றது இதனையடுத்து அந்த நாளே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

Womens day

மகளிர் தினத்தன்று ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்களும் பெண்களுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களை கூறி வருவது வழக்கம். சில அலுவலகங்களில் மகளிர் தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

மனித வாழ்க்கையில் ஆண்களை விட  பெண்களுக்கே அதிக அளவில் சிரமம் உள்ளது. அனைவரும் தெரிந்த விஷயம் ஒன்றே. எனவே ஒவ்வொருவரும் பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டியது அவசியமாகும். உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் தமிழ் ஸ்பார்க் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.