மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாலி'யில் பயங்கரம்... பயங்கரவாத தாக்குதலுக்கு 17 பேர் பரிதாப பலி.!
ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலி நாட்டில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதோடு அப்பாவி மக்களையும் கொலை செய்து வருகின்றனர்.
இங்கு இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் அந்நாட்டின் அரசுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்நிலையில் மாலியில் அமைந்துள்ள போலியோ என்ற கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மாலி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்து இருக்கிறது.