ஆண்டவரின் பர்த்டே ட்ரீட்.. வெறித்தனமாக வெளிவந்த தக் லைஃப் டீசர்.! அட ரிலீஸ் எப்போ தெரியுமா??
20 கோடி பேரின் ட்விட்டர் அக்கவுண்ட் திருட்டு.. இலவசமாக விற்பனை செய்வதாக ஹேக்கர் அறிவிப்பு.. பயனர்கள் அதிர்ச்சி.!
இன்றளவில் இருக்கும் தொழில்நுட்ப உலகில் ஹேக்கர்களின் பிரச்சனை உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிடுகிறது. அரசின் தரவுகள், மக்களின் தனிப்பட்ட விபரங்கள் என பலவற்றை அவர்கள் ஹேக்கிங் செய்துவிடுகின்றனர்.
இந்த நிலையில், உலகளவில் 100 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள ட்விட்டரில், 20 கோடி பேரின் தகவல் திருடப்பட்டு இலவச விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என ஹேக்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டு விற்பனைக்கு உள்ளது என டார்க்வெப் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளதை இஸ்ரேல் உளவுத்துறை உறுதிசெய்த நிலையில், 20 கோடி பயனர்களின் விபரங்கள் இலவச விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.