தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
குளிர்பிரதேசத்தில் இராணுவ வீரர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு.. 21 வயது இளம் வீரர் பரிதாப மரணம்.!
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின், அமெரிக்க விமானப்படை தளத்தில் இராணுவ விமான மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் எஸ்.பி.சி ஹண்டர் ட்ரே ஸ்டான்போர்ட் (வயது 21). இவர் வைன்ரேட்டில் 1 ஆவது பட்டியலின், 25 ஆவது ஏவியேஷன் ரெஜிமென்டி விமான மின்நிலைய பழுது பார்ப்பவராகவும் இருந்து வந்தார்.
கடந்த டிச. 8 ஆம் தேதி அலஸ்காவில் உள்ள பெர்பெக்ளிஸ் பகுதியில் உள்ள வீட்டில் அவர் இறந்து கிடந்ததாக இராணுவம் நேற்று அறிவித்துள்ளது. இவரது மர்ம மரணம் குறித்து இராணுவ குற்றபுலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த இராணுவ அதிகாரியான ஹண்டர் ட்ரேயின் சக பணியாளர் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் மெக்கானிக் டேவிட் ஹோசியா, தனது நண்பரை இறுதியாக செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பின்னர், அவருக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை.
நண்பரின் மரணம் குறித்து டேவிட் தெரிவிக்கையில், "ஹண்டர் ட்ரே ஒரு நல்ல நண்பர். அவர் அதிகம் படித்தது இல்லை. ஆனால், பராமரிப்பு என்று வரும் போது அனைத்தையும் கற்றுத்தேர்ந்தார். இயந்திரங்கள் மீதான நாட்டத்தினால், இன்று இராணுவ விமானத்தின் மெக்கானிக்காக இருக்கிறார். தனது பனிக்காலத்தில் அவர் கடுமையாக உழைத்தவர்" என்று தெரிவித்தார்.
அங்குள்ள முன்போர்ட் பகுதியை பூர்வீகமாக கொண்ட ஹண்டர் ட்ரே, கடந்த 2019 ஆம் வருடம் இராணுவத்தில் இணைத்துள்ளார். பின்னர், 2019 செப் அலாஸ்காவுக்கு வருகை தந்துள்ளார். இவரது மர்ம மரணத்தை போலவே, ஏற்கனவே அங்கு 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அவர்களின் மரணத்திற்கான காரணமும் இராணுவத்தால் அறிவிக்கப்படவில்லை.