கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மருத்துவர்கள் கடவுளுக்கு நிகர் என்பதை நிரூபித்த அமெரிக்கா டாக்டர்..!!
அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டாக்டர் அலி அல்சமாறா. இவர் இதய சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால் யாராவது தானமாக கொடுத்து உதவினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த டாக்டர் அல்சமாறா தானாக முன்வந்து அவரால் இந்த தானத்தை செய்ய இயலுமா என்ற பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த குழந்தைக்காக எலும்பு மஜ்ஜையும் தானமாக கொடுத்து காப்பாற்றியுள்ளார்.
மேலும் இதை பற்றி மருத்துவர்கள் அல்சமாறாவிடம் கேட்கும் போது அவரது பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதாவது டாக்டர் அல்சமாறா கூறுகையில் என்னுடைய எலும்பு மஜ்ஜையை தானமாக கொடுத்ததால் எனக்கு வலி இருக்க தான் செய்கிறது. ஆனால் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி எனக்குள் அதிகமாக இருக்கிறது.
மேலும் அவர் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் நண்பர் ஒருவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த போது யாரோ முகம் தெரியாத ஒரு நபர் உறுப்பு தானம் செய்ததால் அவர் உயிர் பிழைத்து கொண்டார். இந்த சம்பவம் தான் என்னை ஊக்கப்படுத்தி இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற வைத்தது என்று தெரிவித்துள்ளார்.