திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"திரும்பி வந்துட்டேன் னு சொல்லு" டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை மீட்டுக்கொடுத்த எலான் மஸ்க்.!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ட்விட்டர் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டார் என குற்றச்சாட்டினை முன்வைத்து அவரின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021ல் ட்விட்டர் நிர்வாகத்தால் முடக்கம் செய்யப்பட்டது.
தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிவிட்டதால் பல நிர்வாக ரீதியிலான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டின் ட்விட்டர் கணக்கும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க், கருத்துக்கணிப்பு நடத்திய பின்னர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வரை எந்த அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை.