மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் ஜோடியின் அந்தரங்க சேட்டிங்கை ஹேக் செய்து மிரட்டி பணம் பறித்த ஆசாமி.. காதல் ஜோடிகளே உஷார்.!
தொழில்நுட்ப உலகில் நாம் ஒருவரிடம் தனிப்பட்டு பேசுவது பிறருக்கு தெரியாது என்றாலும், அதனை சைபர் குற்றவாளிகள் மோப்பம் பிடித்து நம்மை கவலைக்குள்ளாக்குகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர், இந்தியாவில் இருக்கும் பெண்ணுடன் முகநூல் வழியே நட்பாக பழகி வந்துள்ளார். இருவரின் நட்பும் நாட்கள் கடந்து செல்லும்போது அந்தரங்க விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டு வந்துள்ளன. இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் ஆபாசமாக பேசுதல், அரை நிர்வாணமாக தோன்றுதல் என இருந்து வந்துள்ளனர்.
இந்த தகவலை தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறிந்துகொண்ட டெல்லியை சேர்ந்த ராகுல் குமார் என்ற வாலிபர், அமெரிக்கா பேராசிரியருக்கு தொடர்பு கொண்டு இருக்கிறார். அவரிடம் தங்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து எனக்கு தெரியும் என்றும், நீங்கள் எனக்கு பணம் அனுப்பாத பட்சத்தில் சமூக வலைத்தளத்தில் நீங்கள் பேசிய ஆடியோ, உங்களின் வீடியோ லீக் ஆகும் என எச்சரித்து இருக்கிறார்.
இவ்வாறாக அமெரிக்க பேராசிரியரை மிரட்டி பணம், விலையுயர்ந்த பொருட்கள் என ரூ.39 இதம் வரை ஏமாற்றி இருக்கிறார். ஒருகட்டத்தில் பணம் அனுப்பி நிம்மதியை இழந்த பேராசிரியர், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனத்திடம் (FBI) புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற அதிகாரிகள் டெல்லி சி.பி.ஐ-க்கு தொடர்பு kollave, அவர்கள் ராகுல் குமாரை கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.