உலக அதிபதியாக மாறும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்.. யாராலும் தடுக்க முடியாது - பாபா வங்கா கணிப்பு.!



Baba Vanga Statement about Russia Vladimir Putin

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்று 34 நாட்களை கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் மீது பல்முனை தாக்குதல் நடத்தப்பட்டு, அங்குள்ள நகரங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. பிராந்திய பாதுகாப்பு கருதி ரஷியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து, ரஷியாவின் மீது பொருளாதார தடையை விதித்து வருகிறது. 

ரஷிய படைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் போர்க்களத்தில் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷியாவின் உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக எதிர்கால கணிப்பாளர் என்று கருதப்படும் பாபா வங்கா தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. 

Baba Vanga

பல்கேரிய நாட்டினை சேர்ந்த பெண்மணி தனது இளவயதில் கண்பார்வையை இழந்த நிலையில், இறைவனின் அருளால் அவருக்கு எதிர்காலத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கணிதத்தில் 80 % உலகளவில் அப்படியே நடைபெற்றுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து அவர் தெரிவித்த தகவலாவது, "ரஷியாவும் - விளாடிமிர் புதினும் உலக நாடுகளில் அதிகம் செலுத்துவார்கள்.

கரையும் பனிபோல ஒன்று மட்டுமே தீண்டப்படாமல் இருக்கும். விளாடிமிர் மகிமை ரஷியாவின் மகிமை. ரஷ்யாவை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. அவர்களை எதிர்ப்பவர்களை அப்புறப்படுத்தி முன்னேறுவார்கள். அவர்கள் கைப்பற்றும் விஷயங்களை தக்கவைப்பார்கள். அதனால் உலக அதிபதியாக புதின் இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.