96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
லைவில் 7 பாட்டில் ஓட்கா குடித்தவர் 12 மணிநேரத்தில் மரணம்; பார்வையாளர்களை குஷிப்படுத்த பரலோகப்பயணம்..!!
சீனநாட்டை சேர்ந்த சமூகவலைதள பயன்பாட்டாளர் ஒருவர் நேரலையில் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்து மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது. மதுபானத்தில் 30 விழுக்காடு முதல் 60 விழுக்காடு ஆல்கஹால் கொண்ட வோட்காவினை sanqiange என்ற நபர் தனது பார்வையாளர்கள் முன்பு நேரலையில் குடித்துள்ளார்.
அவர் மொத்தமாக 7 பாட்டிலை ஒரே நேரத்தில் குடித்துள்ளார். இதனால் அடுத்த 12 மணிநேரத்தில் அவர் போதையிலேயே மரணம் அடைந்துவிட்டார். இந்த விஷயம் அவரது பின்தொடர்பாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்றவற்றை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் தனது சக பயன்பாட்டாளர்களுடன் போட்டிபோட்டு மது அருந்தி உயிரைவிட்டது குறிப்பிடத்தக்கது.