96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#BigNews: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 38 தொழிலாளர்கள் உடல் கருகி மரணம்..! சீனாவில் பயங்கரம்.!!
ட்ரேடிங் நிறுவனத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் 38 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணம், Anyang நகரில் Kaixinda Trading நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல பணியாளர்கள் வேலைபார்த்து வந்தனர்.
அப்போது, திடீரென தீ பற்றிவிடவே, பணியில் இருந்த 38 தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் கருகி தொழிற்சாலைக்குள்ளேயே இறந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.