53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
டென்மார்க் நாட்டில் மக்கள் இப்படி இருப்பார்களா?? வியப்பை ஏற்படுத்தும் ஆச்சரிய தகவல்.!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் டென்மார்க் நாட்டின் மக்கள் தொகை 58.3 இலட்சம் ஆகும். இந்த நாட்டின் தலைநகராக கோப்பென்ஹன் (Copenhagen) நகரம் உள்ளது. டென்மார்க்கின் 1 டேனிஷ் க்ரோன் என்பது இந்திய மதிப்பில் ரூ.11 ஆகும். டென்மார்க் குறித்து முகநூலில் ஓம் பிரகாஷ் என்பவர் பதிவிட்ட ஆச்சர்யமூட்டும் தகவல்கள் குறித்து இன்று காணலாம்.
டென்மார்க்கில் காரின் விலை மிகவும் அதிகம். கடுமையான குளிர் அங்கு நிலவினாலும் மக்கள் பேருந்து மற்றும் மிதிவண்டியில் தான் பயணம் செய்வார்கள். உணவகத்தில் உணவுகளின் விலை உச்சம்தொடும் என்பதால், பெரும்பாலும் வீட்டில் சமையல் செய்துதான் சாப்பிடுவார்கள். இவர்கள் பள்ளிப்படிப்பை தாமதமாகத்தான் தொடங்குவார்கள்.
ஆறு வயதில் பள்ளிக்கு சேர தொடங்கி, 30 வயதில் தான் படித்து முடிப்பார்கள். நமது ஊரில் 3 வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை அங்கு படிக்க ஆறரை வருடம் ஆகும். படிக்கும் போதே உலக அனுபவத்தை பெற உலக சுற்றுலா செல்வார்கள். எதாவது ப்ராஜக்ட் செய்வார்கள். கல்லூரி கட்டணம் கிடையாது என்பதால், படிக்கும் போதே அரசு மாணவர்களுக்கு மாத ஊதியமாக 900 டாலர் கொடுக்கும்.
68 % வரி என்ற நடைமுறை அங்கு அமலில் உள்ளது. பெயிண்டருக்கும், இதய மருத்துவருக்கும் ஒரே சம்பளம் தான். அதனால் விருப்பப்பட்ட வேலைக்கு தகுதியின் அடிப்படையில் செல்லலாம். வாரத்திற்கு 35 மணிநேர வேலை என்பதால், வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்துவிடலாம். நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் முதலாளி வரை அனைவரும் ஒரே உணவுதான், அதனை ஒரே அறையில் சாப்பிடுவார்கள்.
பாராளுமன்றத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்களும் அப்படிதான் சாப்பிடுவார்கள். மக்களிடம் சகோதரத்துவம் ஏற்பட, அரசு சார்பில் பல கிளப் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் பொம்மைகள் செய்வது போன்று பல்வேறு கலைகளை கற்றுக்கொள்ளலாம். அரசு சார்பில் கூட்டுறவு வீடுகள் ஏற்படுத்தப்பட்டு, 30 குடும்பங்கள் குடியமர்த்தப்படும்.
அங்கு இருக்கும் குழந்தைகள் எந்த வீட்டிற்குள்ளும் சென்று விளையடுவார்கள். பிறரின் வீட்டிற்கும் தயக்கம் இன்றி சென்று பேசுவார்கள். பணம், ஆடம்பரம் போன்றவற்றை பொருட்படுத்தாத நாடு டென்மார்க். அதனால் பி.எம்.டபிள்யூ காரில் செல்பவரை விட, மிதிவண்டியில் செல்பவர்கள் அதிகம். மிதிவண்டியில் செல்லும் நபர்களுக்கான மதிப்பு கூட, பி.எம்.டபிள்யூவில் செல்லும் நபருக்கு கிடைக்காது. அதனால் பணக்காரன் என்று சொல்ல கூச்சப்படும் மக்கள். தனது வளமையை வாங்கி காண்பிக்காமல் நட்புடன் இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.