கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! கடும் பீதியில் மக்கள்.!
நியூசிலாந்தின் ஆக்லாந்து அருகே வடக்கு தீவின் கரையோரத்தில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து புவியியல் மையம் வெளியிட்ட அறிவிப்பில், நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு ஆபத்தான சுனாமி வரலாம், இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும் என தேசிய அவசரநிலை வேளாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல்கள் தவிர்ப்பதற்காக தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அங்கு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அறிவிப்பைத் திரும்ப பெற்றது நியூசிலாந்து அவசர மேலாண்மை குழு. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.