மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெபக்கூட்டத்திற்குள் கொள்ளைக்கும்பல்.. கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் மரணம்.!
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள லைபீரியா நாட்டின் தலைநகர் மன்ரோவியாவில் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் புதன்கிழமை இரவில் ஜெபக்கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்பகுதியை சார்ந்த மக்கள் திரளாக தேவாலயத்தில் இருந்துள்ளனர்.
அப்போது, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று தேவாலயத்தில் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் தப்பித்து தலைதெறித்து ஓட்டம் பிடிக்கவே, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் கீழே விழுந்த நிலையில், அவர்கள் மீது ஏறி மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கிய 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.