தனக்கு பிறந்த குழந்தை என நினைத்து குழந்தையை வளர்ந்த தாய்! 23 வருடங்களுக்கு பிறகு தெரியவந்த உண்மை!



mom living wrong child 23 years

சீனாவில் சியூ ஜியோசுகான் என்ற 54 வயது நிரம்பிய பெண் 22 வருடங்களுக்கு முன்பு15 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். அப்போது திடீரென அவரின் குழந்தையை யாரோ கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து சியூ போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் அதே பகுதியில் கடத்தப்பட்ட ஒரு குழந்தையை போலீசார் கண்டுபிடித்தனர்.

அது சியூவின் குழந்தை தானா என அறிய நீதிமன்றம் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனையில் அந்த குழந்தை சியூவின் குழந்தை தான் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தையை சியூ வளர்க்க தொடங்கினார்.

wrong child

இந்நிலையில் கடந்தாண்டு 48 வயதான செவிலியர் ஒருவர் லீ ஜினசன் என்ற இளைஞரை தன்னுடன் அழைத்து கொண்டு சியூவை பார்க்க வந்தார். அவரிடம், இந்த லீ தான் உங்களுக்கு பிறந்த மகன், நான் தான் அவனை 23 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தி சென்றுவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார். பின்பு தான் தெரிந்தது  டிஎன்ஏ பரிசோதனை அறிவிப்பில் தவறு நடந்தது என்று.