பள்ளிகளில் இனி செல்போன் பயன்படுத்த அதிரடி தடை: நியூசிலாந்து அரசு அறிவிப்பு.. காரணம் என்ன?.!



New Zealand Govt Banned Smartphones Usage in Classrooms 

 

நியூசிலாந்து நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், வகுப்பறையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்வதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மாணவர்கள் பள்ளி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும் கூறியுள்ள அரசு, மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்படும் குறைகளை தவிர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவுபடுத்தியுள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாக செல்போன்கள் நியூசிலாந்து பள்ளிகளில் உபயோகம் செய்யப்படுவது தொடர்பாக குற்றசாட்டுகள் இருந்து வந்தன. இதனால் மாணவர்கள் தங்களின் வகுப்புகளை கவனிக்காமல் கற்றல் பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கின்றனர். 

இதனையடுத்து, பள்ளியின் வளாகம் மற்றும் வகுப்பறைக்குள் தொழில்நுட்ப சாதனங்கள் உபயோகம் செய்வதை தடை செய்வதாக அறிவித்துள்ள நியூசிலாந்து அரசு, கற்றல் திறன் மேம்படுவதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறியுள்ளது.