#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கர்ப்பிணி எம்.பி செய்த பெரும் சாகசம்.. பிரசவ வலியின் போது என்ன செய்தார் தெரியுமா?..!
நியூசிலாந்து நாட்டினை சார்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர் (வயது 41). இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அவரது வீட்டிற்கு மிக அருகில் மருத்துவமனை இருப்பதால், தன் வீட்டில் இருந்த சைக்கிளை எடுத்து, பிரசவ வலியுடன் அதனை இயக்கி 10 நிமிடத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். இதுகுறித்து ஜூலி பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், "இன்று அதிகாலை 3.04 மணியளவில் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்கிறோம். பிரசவத்தின் போது சைக்கிளில் வர வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், அது ஆச்சர்யப்படும் வகையில் நிறைவடைந்துள்ளது. நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை தந்தையை போல இருக்கிறாள்" என்று தெரிவித்துள்ளார்.
ஜூலி அன்னே ஜெண்டர் அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா மாகாணத்தில் பிறந்து, கடந்த 2006 ஆம் வருடம் நியூசிலாந்தில் குடியேறி அங்கு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது முதல் குழந்தையை இருசக்கர வாகனத்தில் சென்று பிரசவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.