#BigBreaking: உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் தலையீடு.. அணு ஆயுதத்தை தயார் செய்யும் ரஷ்யா?..!



Russian President Vladimir Putin Order deterrence forces on high alert

உக்ரைனை முழுவீச்சில் கட்டுக்குள் கொண்டு வர ரஷியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரஷியாவை எதிர்த்து போரிட உக்ரைன் இராணுவம் மற்றும் அந்நாட்டு ஆண்கள் ஆயுதம் ஏந்தி பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போரில் இருதரப்பிலும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷியாவின் தரப்பில் படைவீரர்கள் கொன்று குவிக்கப்படுவதாக உக்ரைன் அரசு செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், அணுசக்தி உட்பட முக்கிய தடுப்பு படைகள் தயார் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரஷிய அதிபர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷியாவுடன் பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நேட்டோ படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் பட்சத்தில், ரஷிய தலைநகர் மாஸ்கோவை அவர்கள் கைப்பற்றாமல் அல்லது தாக்குதல் நடத்தாமல் இருக்க, அணுசக்தி ஆயுதங்கள் உபயோகம் செய்யப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.