மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 மணிநேர தாக்குதல், சண்டை.. பயங்கரவாதிகள் வெறியாட்டத்தில் 40 அப்பாவி பொதுமக்கள் பேர் பலி..!
கிழக்காபிரிக்காவில் உள்ள சோமாலியாவில் அரசுக்கு எதிரான அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கமானது ஆயுதமேந்திய தாக்குதலில் முனைப்புடன் இருக்கிறது. அல்-கொய்தா ஆதரவுடன் செயல்பட்டு வரும் இயக்கம் இராணுவம், மக்களுக்கு எதிராக தாக்குதலை தொடர்கிறது.
இதனால் அவ்வப்போது பயங்கரவாதிகள் - இராணுவத்தினர் இடையே மோதலும் நடைபெறுவது உண்டு. இந்நிலையில், சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் இருக்கும் நட்சத்திர விடுதியில் பயங்கரவாதிகள் கார்களில் வெடிகுண்டை நிரப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், துப்பாக்கியுடன் மக்களை பிணைய கைதியாக பிடித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த இராணுவத்தினர் - பயங்கரவாதிகள் இடையே சண்டை நடந்த நிலையில், மொத்தமாக பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 மக்கள் பலியாகியுள்ளனர். மேலும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
30 மணிநேரம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த சண்டையின் இறுதியில் எஞ்சிய மக்கள் பத்திரமாக அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.