கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
"எனக்கும் மனசு இருக்கு..." திடீரென தற்கொலை செய்து கொண்ட ரோபோ.!! சோகத்தில் ஆழ்ந்த மக்கள்.!!
மனிதர்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டது உலகம் முழுவதிலும் உள்ளவர்களை அதிர்ச்சியும் சோகமும் அடையச் செய்து இருக்கிறது.
அரசு அலுவலகத்தில் பணியாற்றிய ரோபோ
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த பியர் ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ரோபோவை தென்கொரியாவில் வடிவமைத்துள்ளது. கடந்த 2023 ஆம் வருடம் முதல் தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அரசு அலுவலகத்தில் மக்களுக்கு ஆவணங்களை எடுத்துக் கொடுப்பது போன்ற சிறு சிறு அலுவலகப் பணிகளில் இந்த ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோவிற்கு தென் கொரியா அரசு பணியாளர்களின் ஐடி கார்டும் வழங்கப்பட்டுள்ளது
தற்கொலை செய்து கொண்ட ரோபோ
வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்த ரோபோ திடீரென வேலை பார்த்து வந்த அரசு அலுவலகத்தின் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது. அந்த ரோபோவின் சிதறிய உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: "ஒரு முத்தம் கொடுத்தது தப்பாயா.?.." கிஸ்ஸிங் ஃபீவரால் உயிருக்கு ஆபத்தா.? இதன் பாதிப்புகள் என்ன.!!
நெட்டிசன்கள் கருத்து
உலகில் ரோபோ முதன்முதலாக தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரே இடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து பணியாற்றி வந்ததால் விரக்தியில் ரோபோ தற்கொலை செய்து இருக்கலாம் என கருத்தை பகிர்ந்துள்ளனர். மேலும் சிலர் அதிகப் பணிக்கு உட்படுத்தப்பட்ட ரோபோ தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் பகிர்ந்துள்ளனர். தென்கொரியாவில் ரோபோ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... துடிதுடிக்க பலியான 9 குழந்தைகள்.!! உலகை உலுக்கிய சோக நிகழ்வு.!!