மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி.. அகதிகள் சென்ற லாரி விபத்தில் சிக்கி, 49 பேர் பரிதாப பலி..! சாலையில் பிணக்குவியல்.!!
அகதிகள் பயணித்த லாரி விபத்திற்குள்ளாகியதில் 49 பேர் பலியாகினர். 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சியாப்பாஸ் நகரினை நோக்கி சரக்கு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த சரக்கு லாரியில் 107 பேர் மறைமுகமாக பயணித்ததாக தெரியவருகிறது. சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதை பாலத்தில் மோதி பயங்கர விபத்தை சந்தித்துள்ளது.
இந்த விபத்தில், லாரியில் பயணம் செய்த 49 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 58 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக சியாப்பாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலக தலைவர் லூயிஸ் மானுவேல் மொரேனோ தெரிவிக்கையில், "விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், லாரியில் இருந்த நபர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தில் தப்பிய பலரும் தங்களை குவாத்தமாலா நாட்டினை சார்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் நாடு குறித்த விஷயம் உறுதி செய்யப்படவில்லை. விபத்தை சந்தித்த லாரியில் 107 பேர் பயணித்துள்ளனர். சிலர், குடியேற்ற அதிகாரிகளுக்கு பயந்து தப்பி சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.