தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை; மாபெரும் தொகையை நிவாரண நிதியாக அளித்த ஐக்கிய அரபு அமீரகம்
வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் பேரழிவை சந்தித்துள்ள கேரளாவிற்கு பல பகுதிகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன.
அவ்வகையில் ஐக்கிய அரபு அமீரகம், கேரளாவுக்கு உதவ முன்வந்தது. தங்களது வெற்றியில் கேரள மக்களுக்கு எப்போதும் பங்கு உள்ளதாக கூறிய ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்று தெரிவித்தார். இதற்காக சிறப்பு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:
`மீட்பு நடவடிக்கை, மறு சீரமைப்புப் பணிகள், நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் கூட்ட ஆளுநருக்கும் பரிந்துரை செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். மேலும், ஐக்கிய அரபு எமிரேட் அளித்த நிவாரண நிதி குறித்துப் பேசிய பினராயி, `வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர், ஐக்கிய அரபு எமிரேட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் கேரள வெள்ளம் குறித்து பகிர்ந்த ட்விட்டர் பதிவில், `ஐக்கிய அரபு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு கேரள மக்களின் பங்கு அதிகம். தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்கு சிறப்பு உதவி செய்வது மிக அவசியம்’ என குறிப்பிட்டிருந்தார்.