Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
பாலுணர்வை தூண்டும் உஸ்பெகிஸ்தான் நாட்டின் புலாவ்; அசத்தல் தகவல் இதோ.!
உஸ்பெகிஸ்தான் நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாகவும், அந்நாட்டின் தேசிய உணவாகவும் இருப்பது புலாவ். நமது ஊர்களில் புலாவ் சென்னை போன்ற குறிப்பிடத்தக்க பெருநகரங்களில் கிடைக்கிறது. ஆனால், உஸ்பெகிஸ்தான் நாட்டின் தேசிய உணவான புலாவ், பாலுணர்வை தூண்டும் குணாதிசியம் கொண்டது என நம்பப்படுகிறது. வியாழக்கிழமையில் வாரம் ஒருமுறை கட்டாயம் அந்நாட்டவர்கள் தங்களின் உணவு முறையில் புலாவை சேர்த்துக்கொள்கின்றனர்.
காய்கறிகள், இறைச்சி, அரிசி, பாரம்பரிய மசாலாக்கள் சேர்க்கப்பட்ட புலாவ், அந்நாட்டின் ஒவ்வொரு சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கட்டாயம் வழங்கப்படும் உணவாகவும் இருக்கிறது. மாவீரனாக அலெக்ஸாண்டர் போர்தொடுத்து சென்றபோது, இராணுவ வீரரின் நலன் மற்றும் சக்தி மீட்டெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட புலாவ், 9 மற்றும் 10ம் நூற்றாண்டில் இருந்து அந்நாட்டில் பிரபலமாக இருந்து வந்துள்ளது.
நெற்பயிரை பிரதானமாக பயிரிட்டு வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டில், உயர் ஊட்டச்சத்து, கலோரி கொண்ட உணவாக புலாவ் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட புலாவ் வகைகள் அங்கு இருக்கிறது உஎன்பதால், மாகாணம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப அவை வேறுபடுகின்றன.
புலாவில் சேர்க்கப்படும் காய்கறிகள், இறைச்சி உட்பட பிற பொருட்கள் பாலுணர்வை தூண்டும் குணத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது. புலாவ் சமைக்கப்பட்ட பாத்திரத்தின் அடியில் எஞ்சியிருக்கும் எண்ணெய் இயற்கை வயகரா என்ற பெயரில் ஆண்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.