மறுபடியும் முதலில் இருந்தா?.. ஒட்டகத்தில் இருந்து மெர்ஸ் கொரோனா வைரஸ் பரவுகிறது; உலக சுகாதார அமைப்பு உச்சகட்ட எச்சரிக்கை.!



WHO Confirm Mers Covid 

 

கடந்த 2021 & 2022ம் ஆண்டுகளில் மக்களை உலகளவில் வாட்டி வதைத்த கொடிய வைரஸ் கொரோனா. இந்த வைரசுக்கு தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டாலும், அன்றைய காலங்களில் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது. 

இந்நிலையில், கொரோனாவை விட மோசமான சுவாச பிராணிகளை உண்டாக்கும் மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சனை போன்றவை இவற்றின் அறிகுறிகள் எனவும், 28 வயதுடைய இளைஞருக்கு இவ்வகை வைரஸ் முதலில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

WHO

சவூதி அரேபியா, அல்ஜீரியா, பஹ்ரைன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, லெபனான், மலேஷியா, பிலிப்பைன்ஸ் உட்பட 27 நாடுகளில் ஒட்டகத்திடம் இருந்து பரவ வாய்ப்புள்ள இவ்வகை நோய் கடந்த காலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளை அதிரவைத்த கொரோனா 5% மரணத்தை மட்டுமே தந்தாலும், மெர்ஸ் கொரோனா தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களில் 35% நபர்களின் உயிரிழப்பை உறுதி செய்துள்ளது. 

சம்பந்தப்பட்ட 28 வயது நபரின் நாடு உட்பட பிற விபரங்களை தெரிவிக்க மறுத்துள்ள ஐ.நா, அவருடன் தொடர்பில் இருந்த நூறுக்கும் மேற்பட்ட நபர்களின் மாதிரியை சோதனைக்கு அனுப்பியபோது, பிறருக்கு அவ்வகை நோய் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.