எப்போதும் எண்ணெய் வழியும் முகம் உடையவரா,இனி கவலை வேண்டாம் ;



how-to-remove-oil-face

பலருக்கு என்னதான் அடிக்கடி முகத்தை கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை முற்றிலும் போவதில்லை இது இதனால் அவர்கள் எந்நேரமும் சோர்வாகவும் சோகமாக இருப்பது போன்றும் தென்படுவார்கள் இந்த கவலையை போக்க இதோ ஒரு டிப்ஸ் உங்களுக்காக:

தக்காளிப்பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டு விடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கி விடும்.

oil face
எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.

சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச் சாறுடன் பால் பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக் காணப்படும்.