மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பாக செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சி.! அடேங்கப்பா டிஆர்பி ரேட்டிங் எவ்ளோ தெரியுமா.?!
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் பிக் பாஸ் சீசனில் எத்தனை சீசன்கள் வந்தாலும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை போல வராது என்று தான் ரசிகர்கள் பெரும்பாலும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் 2வது சீசனிலிருந்து 6வது சீசன் வரையில் ரசிகர்கள் நிகழ்ச்சியை ஏதோ பார்க்க வேண்டும் என தான் பார்த்து வந்தார்கள். பெரிய அளவில் இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனாவது அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனளவிற்கு இருக்குமா? என்றால் இல்லை என்று தான் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த சீசன் வேற மாதிரி என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.
முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புகிறார்கள், அடுத்த வாரமே வெளியே அனுப்புகிறார்கள், மீண்டும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே சென்றவர்களை உள்ளே அழைக்கிறார்கள். இப்படித்தான் மாறி, மாறி நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களால் ஒரு கணிப்புக்கு வர இயலவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் தற்போது பிக்பாஸ் சீசன் 7 டிஆர்பி விவரம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீசன் தொடங்கியபோது இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி 6 ஆக இருந்தது ஆனால் பிரதீப்பை வெளியே அனுப்பிய பின்னர் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி 6.7 என்று அதிகரித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 46வது வாரத்தில் டி.ஆர்.பி 6.9 என அதிகரித்ததாக ஒரு சில விவரங்கள் மூலமாக தெரிய வருகிறது.