சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
செந்தூர் கோவிலுக்குச் சென்ற தாய், 5 வயது மகன் விபத்தில் சிக்கி பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!

திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் சென்றவர்கள் விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சித்தர். இவரின் மகன் ராஜ்குமார். ராஜகுமாரின் மனைவி தமிழரசி. தம்பதிகளுக்கு 5 வயதுடைய அஸ்வர்தன் என்ற மகன் இருக்கிறார். இவர்களின் உறவினர்கள் விஜயா, தாமரைச்செல்வி, சுமதி.
இதையும் படிங்க: #JustIN: காதல் விவகாரம்.. உயிரே போச்சு.. 17 வயது சிறுமி எரித்துக்கொலை.!
விபத்தில் சிக்கிய கார்
இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். இவர்களின் கார் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்றுகொண்டு இருந்தது.
நொறுங்கியது
அங்குள்ள எட்டயபுரம் துரைசாமிபுரம் விலக்கு பகுதியில் வாகனம் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பள்ளத்தில் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் காரின் முன்புறம் நொறுங்கியது.
2 பேர் பலி
காரில் பயணம் செய்த தமிழரசி மற்றும் அவரின் 5 வயது மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பிற அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து எட்டயபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீசை முளைக்காத வயதில் பப்பி லவ்.. பேசமறுத்த சிறுமியை மண்ணெணெய் ஊற்றி எரித்த எக்ஸ்.. தூத்துக்குடியில் திடுக் சம்பவம்.!