மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Biggboss : முடிவுக்கு வராத நிக்சன் அராஜகம்.. விஜய் டிவி எடுத்த தடாலடி முடிவு.?!
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தமட்டில் வார இறுதி வந்து விட்டாலே ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். கமல்ஹாசனை நேரில் பார்ப்பது மட்டுமல்லாமல், அந்த வாரம் முழுவதும் கண்ணைக் கட்டிக்கொண்டு ஆட்டம் போட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் நன்றாக வங்கி கட்டிக் கொள்ளும் நிகழ்வும் நடப்பதுண்டு. இதன் காரணமாகவே வார இறுதி வந்து விட்டாலே ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை உற்று நோக்க தொடங்கி விடுவார்கள்.
ஆனாலும் நடப்பு சீசனில் வார இறுதி நாட்களில் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக, ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் பாரபட்சம் பார்க்கிறார் என்று அவரை விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர். இதனால் கடுப்பான கமல்ஹாசன், சென்ற வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களை சற்று கடினமாகவே பேசி விட்டார்.
அதன்படி பிக்பாஸ் போட்டியாளர்கள் பதில் பேச முடியாத அளவிற்கு கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்து விட்டார் கமல்ஹாசன். அதேபோல இந்த வாரமும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான கேள்விகளைக் கேட்டு அவர்களை பதில் பேச முடியாமல் நிற்க வைக்குமளவிற்கு சம்பவங்கள் நடைபெறலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் நிக்சன் பெண்களிடம் மிகவும் அத்துமீறி நடந்து கொள்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அர்ச்சனாவை மிகவும் தரகுறைவாக அவர் பேசி கொலை மிரட்டல் எடுத்துள்ளார்.
இந்த வாரம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எலிமினேஷன் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மை தன்மை இல்லை என்று கூறி நிக்சனை காப்பாற்றுவதற்காக விஜய் டிவி இப்படி நாடகம் போடுகிறது என்று பலரும் விமர்சித்த நிலையில், இதற்கு எதிராக நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க விஜய் டிவி பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து நிக்ஸனை கமல் வெளியேற்றுவார் என்று கூறப்படுகிறது.