மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாயாவின் வித்தையை கண்டு கொண்ட சக போட்டியாளர்.! அடுத்த ஆப்பு இவருக்குத்தான்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்து மாயாவின் விளையாட்டு யுத்தி பலரையும் நிலை குலைய வைத்திருக்கிறது. இவர் தந்திரமாக போட்ட திட்டத்தால், முதலில் வெளியேற்றப்பட்டவர் பிரதீப். அவரை போல தனக்கு போட்டியாக நினைத்த அனைவரையும் இதுபோன்று ரகசிய திட்டங்கள் போட்டு வெளியேற்றி வருகிறார்.
அவருடைய இந்த ரகசிய திட்டத்திற்கு பூர்ணிமாவும் விதிவிலக்கல்ல என்பது நாமினேட் செய்வதிலேயே தெரிந்தது. அதை தான் தற்போது மாயாவிடம் விசித்ரா நேரடியாகவே கேட்டுவிட்டார். ஆனால் அதனை மறுத்து பேசாத மாயா, நான் துரோகம் செய்ய மாட்டேன், முகத்திற்கு நேராக சொல்லி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மாயாவின் ரகசிய தந்திரத்தை கண்டுபிடித்ததன் காரணமாக, இனிவரும் தினங்களில் மாயாவின் விளையாட்டு யுக்தி மாறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. பூர்ணிமாவை மாயா நாமினேட் செய்திருந்தாலும், அவருடைய அல்டிமேட் டார்கெட் நிக்சன் தான். இதனை தெரிந்து கொண்ட பூர்ணிமா, தற்போது நிக்ஸனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அதன்படி மாயாவின் அடுத்த டார்கெட் யார்? என்ற பதற்றம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கிடையே தற்போது தலை தூக்க தொடங்கியிருக்கிறது.