சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
முதல்ல இ.பி,எஸ்.. அடுத்து ஓ.பி.எஸ்.! சசிகலா, தினகரனுடன் கைகோர்க்கபோகும் எடப்பாடி பழனிசாமி.?!

வரும் 2026 ஆம் வருடம் நடக்கவுள்ள தேர்தலுக்காக தமிழக கட்சிகள் அனைத்தும் மும்முரமாக கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் கூட்டணியில் ஈடுபட்டு இந்த தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இதில் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பாஜக மேலிடமோ கூட்டணிதான் முக்கியம் என்றும், அண்ணாமலையை கழட்டி விட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், பாம்பன் தூக்கு பாலத்தை திறக்க வரும் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை புரிகிறார்.
அவரது இந்த வருகையின் போது அதிமுக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, ஓபிஎஸுடனும் மோடி பேச இருக்கின்றாராம். ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து தினகரன் மற்றும் சசிகலா இருவரையும் தங்கள் கூட்டணிக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்க போவதாக தெரிகிறது.
இதையும் படிங்க: "பேசாம கட்சியை விட்டு போயிடுங்க." டெல்லியில் அண்ணாமலைக்கு செக்.?!
கிட்டத்தட்ட பிரிந்து போன அதிமுகவாசிகள் அனைவரையும் பாஜக தன்வசம் இழுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால் அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அனைவரும் ஒரே புள்ளியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "முஸ்லிம்களின் சொத்துக்களை..." எம்புரான் திரைப்படத்திற்கு ராமதாஸ் கண்டனம்.!