"16 மணி நேரம் வேலை.. சம்பளம் மட்டும் கேக்காதீங்க".. ஐடி நிறுவனத்தின் அராஜகம்.. ஆட்சியரிடம் கதறல்.!



thenkasi IT company cheated employees

ஐ.டி.துறை என்றாலே படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் கவர்ச்சிகரமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வாழ்க்கை முறை மிகவும் சௌகரியமானதாக இருக்கும் என்றும், கை நிறைய சம்பளம் வாங்கலாம் என்றும், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை, ஆபீஸ் டூர், டீம் லஞ்ச் என்று பல்வேறு கவர்ச்சிகரமான விஷயங்களை பார்த்து அந்த துறைக்கு செல்ல வேண்டும் என்று இளைஞர்கள் ஆசை கொள்கிறார்கள். 

ஆனால், இவை எல்லாவற்றையும் விட வேலைப்பளு மற்ற துறைகளுக்கு சவால் விடும் விதமாக இருக்கும் என்று ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி குமுறுவதை ஆங்காங்கே நாம் காணலாம். இந்த நிலையில், ஒரு தனியார் நிறுவனம் 16 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு மாத கணக்கில் சம்பள பாக்கி வைத்திருப்பதாக புகார் ஒன்று எழுந்துள்ளது.

thenkasi

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் Hepto டெக்னாலஜிஸ் நிறுவனம் தான் இந்த குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது. அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையாம்.

இதையும் படிங்க: சேலம்: ஆன்லைன் விளையாட்டில் லட்சங்களை இழந்த எல்ஐசி முகவர் விபரீதம்; கண்ணீரில் குடும்பத்தினர்.!

ஒரு நாளைக்கு 14 இல் இருந்து 16 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு ஓய்வும், சம்பளமும் கொடுக்காமல், அலை கழித்ததாக இரு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், இது பற்றி கேள்வி எழுப்பிய போது நிறுவன தரப்பினர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருப்பூர்: பப்பாளி சாறு நிறுவனத்தில் நேர்ந்த சோகம்; 2 வடமாநில தொழிலாளர்கள் பலி.!