சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
"பேசாம கட்சியை விட்டு போயிடுங்க." டெல்லியில் அண்ணாமலைக்கு செக்.?!
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்தார். அப்போது, அவர்கள் இடையே நடந்த உரையாடல் என்ன என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. வரும் 2026 தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானது என்று அண்ணாமலையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த கூட்டணியை ஏற்கும் பட்சத்தில் நீங்கள் மாநில தலைவராக நீடிக்கலாம் என்றும், ஒருவேளை கூட்டணியில் விருப்பம் இல்லை என்றால் கட்சி நலனை கருத்தில் கொண்டு அண்ணாமலையே முடிவெடுக்கலாம் என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அண்ணாமலை அதிமுக கூட்டணியை ஏற்காமல் பல்வேறு புள்ளி விவரங்களை தலைவர்களிடம் காட்டி அவர்களுடன் கூட்டணி வைப்பது பா.ஜ.க.வுக்கு நன்மை கிடையாது என்றும், அப்படி நீங்கள் கூட்டணி வைத்தால் எனக்கு இந்த பதவியில் இருக்க விருப்பம் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: தமிழ்நாடு முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து; உபி முதல்வருக்கு பதிலடி கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்.! என்ன சொன்னார் தெரியுமா?
அண்ணாமலையின் இந்த நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்ய சொல்லி தலைவர்கள் வற்புறுத்தியதாக தெரிகிறது. ஒருவேளை இந்த கூட்டணியை ஏற்கவில்லை என்றால் கட்சி நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுங்கள் என்று தெரிவித்தனராம்.
இது அண்ணாமலை விசுவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலை என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பாஜக மகளிரணி நிர்வாகி தற்கொலை.. உருக்கமான கடிதம்.. கைப்பற்றிய போலீஸ்.!