மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 ஆண்டுகள் நிறைவு.. ஒன்றாக கொண்டாடிய விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா.!
தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய் தேவர்கொண்டா. முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் ராஸ்மிகா மந்தனாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'இன்கேம் இன்கேம் காவாலே' என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனையடுத்து விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறியது. இந்த நிலையில் கீதா கோவிந்தம் திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் நெருங்கிய நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வதந்திகள் பரவியது.
இதனையடுத்து பொதுவெளியில் இணைந்து வருவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது கீதா கோவிந்தம் திரைப்படத்தின் 5ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்காக இருவரும் தற்போது ஒன்று கூடியுள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.