குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
இன்றுடன் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள்.! தமிழக அரசு உத்தரவு!!
தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 5,329 சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணையை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. மேலும் ஆணையின்படி மூடப்படும் மதுபான கடைகளின் பட்டியலையும் டாஸ்மாக் நிர்வாகம் தயார் செய்து வந்தது.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் கோயில்களுக்கு அருகே இயங்கிவரும் 500 மதுபானக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் நாளை முதல் தமிழ்நாட்டில் அடையாளம் கண்டு பட்டியலிடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.