#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியான தளபதி 64 படத்தின் ரிலீஸ் தேதி! உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக வெளியான படம் தான் பிகில். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் அடுத்ததாக மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. இதனை அடுத்து தற்போது விஜய் 64 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி விஜய் 64 படத்தின் ரிலீஸ் தேதி வரும் வருடம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.