#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம்.! எப்போ தெரியுமா? பரவும் தகவல்!!
மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஆடுஜீவிதம். பிளெஸி இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.
உண்மை சம்பவம்
இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் மாதம் வெளிவந்தது.
ஓடிடி ரிலீஸ்
இந்தப் படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் கடினமாக உழைத்துள்ளார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், ஆடுஜீவிதம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த திரைப்படம் வரும் மே 26 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.