#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் சக்திக்கு இப்படி ஒரு பரிதாபமான நிலைமையா.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளர்ந்து வந்தவர் சக்தி. இவர் தயாரிப்பாளரும், இயக்குனருமான வாசு என்பவரின் மகன். சக்தி முதன் முதலில் 'தொட்டால் பூ மலரும்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்திற்குப் பிறகு ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் போன்ற சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற நடிகராக இருந்து வந்தார். இதில் 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
இதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்து எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றிருந்தார். இதன் பின்பும் இவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் சக்தியின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய் காணப்படுகிறார். மேலும் நடிகர் சக்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.