மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவருக்கென உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்களை மக்கள் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. ஹெச் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
நடிகர் அஜித் படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், தனது குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் அஜித் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்,மனைவி ஷாலினியை கட்டிப்பிடித்தபடி ரொமாண்டிக்காக போஸ் கொடுத்துள்ளார். அது வைரலாகி வருகிறது.