#Breaking: "சாக்கடை ஆட்சியின் அதிகார அத்துமீறல்" - நாம் தமிழர் சீமான் ஆவேசம்.!



ntk-seeman-on-tn-govt-30-march-2025

 

அதிகாரத்தை பயன்படுத்தி நடக்கும் அத்துமீறல், ஆளுங்கட்சிக்கு பூனை தனது குட்டியை கடிப்பது போன்றும், பிற நபர்களுக்கு பூனை எலியை கடிப்பது போன்றும் செயல்படுத்தப்படுகிறது என சீமான் விமர்சித்தார்.

 

திருச்சி விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியகுற்றவாளி யார்?. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் யார் சுடச்சொன்னத்? மக்கள் முன்னின்று போராட்டம் நடத்தினர். மனு கொடுக்க வந்த போராட்டம் அது. அதனைவிட்டு சுட்டு கலைக்க காரணம் என்ன? அதற்கு முன்பே காவலர்கள் குவிக்க வேண்டிய காரணம் என்ன?. 

இதையும் படிங்க: #Breaking: வீரப்பன் மகள் வித்யாராணிக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு..!

நீதி எங்கே?

பொள்ளாச்சி விஷயத்தில், நாங்கள் வந்தால் விசாரிப்போம் என கூறினார்கள், இன்று வரை திமுக பொள்ளாச்சியை விசாரணையை நடத்தவில்லை. அதிகாரம் தேவையானதை எடுத்துவிட்டு, பிறவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது. டாஸ்மாக் ஊழலில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியுமா?.

NTK

நம்பிக்கை மறைகிறது

எதுவுமே முறையாக இல்லை. அமைச்சரின் தம்பி கொலை வழக்கிலும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும். நீதிமன்றம், தேர்தல் அதிகாரிகள் என அனைவரும் ஆட்சியை பொறுத்தே பதில் இருக்கிறது. நாட்டின் மதிப்புமிக்க நீதிமன்றமும் நம்பிக்கையை இழக்க வைக்கிறது. 

சாக்கடை ஆட்சி

அரசியல் வியாபாரிகளுக்கும், அரசியல் போராளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. சி.வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு விஷயத்தில், நாம் தமிழர் கட்சியை அவர்கள் எடுத்துக்கொள்ளாமலேயே முதல்வர் வாய்ப்பு ஸ்டாலின், விஜய்க்கு இருப்பதாக கூறுவது எப்படி?. உங்களின் ஆட்சி சாக்கடை என்பதை உணர்த்த எனது வீட்டிலும், சவுக்கு சங்கர் வீட்டிலும் அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறல் நடந்துள்ளது. 

NTK

மக்கள் வாக்கை நம்புகிறோம்

திமுகவை வீழ்த்த விஜய் எடுத்துள்ள நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். நாங்கள் வீரர்கள், எதிரியை தீர்மானித்த போருக்கு வந்துள்ளோம். என் மக்களின் வாக்கை நாங்கள் வாங்கப்போகிறோம்" என பேசினார்.

இதையும் படிங்க: "பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே" - பெரியார் கழகத்தினர் ஊர் ஊராக போஸ்டர்..!