வேலைக்கு சென்றவர், ஏரியில் வெட்டுக்காயத்துடன் சடலமாக மீட்பு; கண்ணீரில் உறவினர்கள்.. திருவள்ளூரில் சோகம்.!



in Thiruvallur Man Killed 

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, சின்னம்பேடு, பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர் (வயது 30). இவர் லிப்ட் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். 

தற்போது வரை திருமணம் ஆகாத சங்கர், நேற்று வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். பின் மீண்டும் இரவில் வீட்டுக்கு வரவில்லை. செல்போனில் அழைத்தும் பலன் இல்லை. 

இதையும் படிங்க: திருவள்ளூர்: ரூ.1000 தகராறில், 19 வயது சட்டக்கல்லூரி மாணவர் சரமாரியாக குத்திக்கொலை..!

வேலைக்கு சென்றவர் கொலை

இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிய நிலையில், பேட்டை கிராமம் ஏரியில், சடலமாக இருந்தார். அவரின் தலையில் வெட்டுக்காயமும் இருந்தது. இதனால் அவரை யாரேனும் கொலை செய்திருக்க வேண்டும் என்ற அச்சம் ஏற்பட்டது.

thiruvallur

காவல்துறை விசாரணை

இதனையடுத்து, இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த ஆரணி காவல்துறையினர், சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ்.பி சீனிவாச பெருமாளும், நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார். 

இதையும் படிங்க: திருவள்ளூர்: ஒன்றரை வயது குழந்தையை கடித்துக்குதறிய வெறிநாய்; பெற்றோர்களே கவனம்.. அலட்சியம் வேண்டாம்.!