நள்ளிரவில் பிரசவ வலி.. தள்ளுவண்டியில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற கணவர்.. பிஞ்சு மரணம்.!



in-madhya-pradesh-pregnant-woman-husband-push-cart-vehi

 

மருத்துவர்களின் அலட்சியமான செயல்பாடு காரணமாக பச்சிளம் பிஞ்சு உயிரிழந்தது.

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சலைனா பகுதியில் வசித்து வரும் தம்பதியில், மனைவி கர்ப்பமாக இருக்கிறார். வருக்கு சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: லாரி - சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 7 பேர் பரிதாப பலி.!

2 முறை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

இதற்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின் வலி ஏற்படவில்லை. இதனால் இரண்டு முறை பெண்மணி அடுத்தடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். '

Madhya pradesh

பிரசவ வலி

இதனிடையே, மூன்றாவது முறையாக பெண்ணுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்படவே, அவரின் கணவர் தள்ளுவண்டியில் மனைவியை நள்ளிரவு நேரத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

குழந்தை இறப்பு

மருத்துவமனை செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்துவிட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் குறித்த கலங்கவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 5 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம்; 17 வயது சிறுவன் போதையில் நடத்திய பயங்கரம்..!