#Breaking: ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணமா? - முதல்வர் கடும் கண்டனம்.!



TN MK Stalin Condemn ATM Extra Money Case 

 

ரிஸர்வ் வங்கி மே மாதம் முதல், பிற வங்கி ஏடிஎம் பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து, மாதம் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ரூ.2 முதல் ரூ.23 வரை வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த விஷயம் தேசிய அளவில் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது.

முதல்வர் கண்டனம்

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்த விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, வங்கிக்கணக்கு இல்லாத பிற ஏடிஎம் மையத்தில், மாதம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கொலை, கொள்ளை நிறைந்த தமிழ்நாடு.. இதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் கண்டனம்.!

ஏழை-எளிய மக்கள் அவதி

இந்த தொகை உயர்த்தப்பட்டது மிகவும் அநீதியான செயல். அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும் என மத்திய அரசு கூறியது. பின் ஏடிஎம் சேவை உட்பட பல விஷயங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை-எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். 

100 நாட்கள் வேளையில் பயன்பெறும் ஏழை-எளிய மக்களின் பணத்தை கூடுதலாக வசூலிப்பது எப்படிப்பட்டது?" என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: #Breaking: திமுக அரங்கேற்றும் மெகா நாடகம்.. தோலுரிக்க பாஜக போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு.!